/* */

பள்ளி மாணவி தற்கொலை: நீதி கேட்டு சாலை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

கரூரில் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு பேருந்து நிலையப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது.

HIGHLIGHTS

பள்ளி மாணவி தற்கொலை: நீதி கேட்டு சாலை சாலை மறியலில்  ஈடுபட்ட மாணவர்கள் கைது
X

பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.

கரூரில் உள்ள வெண்ணைமலையில் 12 ம் வகுப்பு படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கரூர் வெங்கமேடு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்ய வலியுத்தி கரூரில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான மாணவர்கள் கரூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பேருந்து நிலையத்திலிருந்து கோவை, திருச்சி சாலைகளில் பேருந்துகள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் போலீசாரின் சமாதானத்தையும் மீறி மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை கைது செய்தனர்.

Updated On: 24 Nov 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!