/* */

வட்டாட்சியர் அலுவலகத்தில் காற்றில் பறந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர், அமைச்சர்கள் புகைப்படத்துடன் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த பேனரால் பரபரப்பு.

HIGHLIGHTS

வட்டாட்சியர் அலுவலகத்தில் காற்றில் பறந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்
X

வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

கரூர் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது ஏதோ ஒரு கடமைக்காக மட்டுமே கரூர் மாவட்ட நிர்வாகமும், மாநில தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள், அதுவும் அலுவலக வாயிற்படியிலேயே இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி மட்டுமில்லாது சுயேட்சைகள் என்று பாராமல் தேர்தல் நடுநிலையாக நடக்க வேண்டுமென்பதற்காக அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் மற்றும் புகைப்படங்களை எடுக்க வேண்டுமென்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. ஆனால், கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்தால் கொரோனா ஊசி குறித்த விழிப்புணர்வுகள் அடங்கிய பிளக்ஸ்களில் முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி புகைப்படமும், தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் சுப்பிரமணி ஆகியோரது புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ்கள் மக்களை திமுகவிற்கு வாக்களிக்கும் வகையில் கவருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தினந்தோறும், பல்வேறு துறையினை சார்ந்த அரசு அதிகாரிகள் வந்து செல்லும் இந்த பிளக்ஸ் பேனர்கள் அமைத்திருப்பதனை கரூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நட்த்தும் அலுவலரும் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

Updated On: 1 Feb 2022 4:08 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்