/* */

கரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்: 500 பேர் கைது

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்காக சாலை மறியல் ஈடுபட்ட தொழில் சங்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் கைது.

HIGHLIGHTS

கரூரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்: 500 பேர் கைது
X

விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட தொழில்சங்கத்தினர்.

கரூர் மாவட்டத்தில் பொது முடக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 7 இடங்களில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தும் கரூர் பேருந்து நிலையம் அருகே தொமுச, சிஐடியு , ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். பின்னர் தொமுச மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 9:30 AM GMT

Related News