/* */

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு, கரூரில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம்
X

கரூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வின் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்), கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் தான்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், குளித்தலை சார்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் இன்று லோக் அதாலத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் நீதிபதிகள் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி கோபால் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, தலைமை குற்றவியல் நீதிபதி ராஜலிங்கம் நீதிபதிகளும் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மோகன் ராம் மற்றும் வழக்கறிஞர்கள் உதவியுடன் சமரசம் செய்ய கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்படி கரூர் , குளித்தலை நீதிமன்றம் - மாவட்ட முதன்மை நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்ப பிரச்சனை, சமரச குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அந்தந்த நீதிமன்றங்களில் சமரசம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  2. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்