/* */

உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் தாயாரை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி
X

உயிரிழந்த பள்ளி மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறுகின்றனர் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலியல் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண்ணாக நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கரூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய சைபர் க்ரைம் போலீசார், மாணவிக்கு யாரேனும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இதனையடுத்து, நேற்று இரவு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் மாணவியின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சுமார் பத்து நிமிடத்திற்கு மேலாக மாணவியின் தாயாரிடம் நடந்தது குறித்து இருவரும் விசாரித்தனர்.

Updated On: 24 Nov 2021 4:00 AM GMT

Related News