/* */

கரூர்: 3 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 50,113 பேருக்கு தடுப்பூசி

3 வது மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாமில் மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்தார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 3 ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், மாவட்ட ஆட.சியர் பிரபு சங்கர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு பயந்தவர்களின் பயத்தினை போக்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தியதோடு, வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று மட்டும் 50,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழக அளவில் மூன்றாம் முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, மண்மங்கலம், அரவக்குறிச்சி, கடவூர், கிருஷ்ணராயபுரம், புகளூர் ஆகிய 7 வட்டங்களிலும் உள்ள அனைத்து முகாம்களிலும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர் தலைமையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்., கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிரமாக சென்று, முகாம்களில் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று குழுக்களாக சென்று விசாரித்தும், ஆங்காங்கே பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி புதுப்பட்டி கிராமத்தில் இதுவை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்த வயது முதிர்ந்த தம்பதியினர் வீட்டிற்கே கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர் சென்று அவரும் அவரது மருத்துவக்குழுவினரும் வீடு தேடி சென்று அந்த வயதான தம்பதியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயத்தினை போக்கியதோடு, வீட்டிலேயே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல, மாவட்டம் முழுவதும் மருத்துவத் துறையினர் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இன்று 50,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 27 Sep 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்