/* */

கரூர் நியாய விலைக்கடைகளில் கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு

கரூர் மாவட்ட நியாய விலைக்கடைகளில் கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கரூர் நியாய விலைக்கடைகளில் கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு
X

கரூரில் நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூரில் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருள்கள் வாங்க வந்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தமிழக அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கடந்த 15ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 100 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது..

இதனை கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது பொதுமக்களின் குறைகளையும் ஆட்சியர் கேட்டறிந்ததுடன் விரைவாக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கரூர் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ரூ.2000 உதவித் தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாய விலை கடைகளில் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து இன்று ஆய்வு நடைபெற்று வருகிறது.

பொதுமக்களுக்கு முறையாக டோக்கன் வழங்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுவதையும், இதில் உள்ள குறைபாடுகள் குறித்து முழுமையான பார்வையிட்டு ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து மளிகை பொருட்கள் தொகுப்புகளில் எடை குறைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, எந்தெந்த கடைகளில் எடை குறை உள்ளது என்பதை நேரடியாக ஆய்வு செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட இருப்பதாக தெரிவித்தார்.

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகளில் எண்ணிக்கை குறைவாக சத்துணவு மையங்களில் வழங்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு காந்திகிராம், தாந்தோன்றிமலை, வெள்ளியணை பள்ளிகளில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Updated On: 17 Jun 2021 1:11 PM GMT

Related News