/* */

கரூர் மாவட்ட மைய நூலகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

கரூர் மாவட்டத்தில் மைய நூலகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்ட மைய நூலகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு
X

கரூர் மாவட்ட மைய நூலகத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார் மைய நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மகேஷ் போய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படியே நிகழாண்டில் தனியார் பள்ளிகளில் 75 சத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் அதுவும் இரண்டு தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அதன் நிலை ஆய்வு செய்யப்படுகிறது ஆய்வுக்கு பிறகு அந்த பள்ளிகளில் மேம்படுத்தி தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் ஊரடங்கு தொடர்பான முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டால் அதற்காக தயார் நிலையில் உள்ளோம்

பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை எழும் பொழுது அதற்கான காவல்துறை வழக்கு செய்யப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என முதல்வர் கூறியுள்ளார்.நீட் தேர்வு தொடர்பாக அதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அந்த கமிட்டியின் முடிவுகள் படியே தமிழக அரசு செயல்படும் என்றார்.

Updated On: 13 Jun 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  4. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  5. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  7. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  8. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  9. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  10. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!