/* */

நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: எம்பி ஜோதிமணி பேட்டி

நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த அநீதியை வென்றெடுப்போம் என எம்பி ஜோதிமணி கூறினார்.

HIGHLIGHTS

நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: எம்பி ஜோதிமணி பேட்டி
X

மாற்றித்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்குகிறார் எம்பி ஜோதிமணி.

கரூரில் மக்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர ஸ்கூட்டர்களை எம்பி ஜோதிமணி வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. மாணவர்கள் தைரியமாக இருங்கள் நம்பிக்கையோடு இருங்கள். ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையை தீர்மானித்தை விடாது. நீட் தேர்வு நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடி கொண்டுள்ளோம். நிச்சயமாக நீட் அநீதிக்கு ஒருநாள் முடிவு கட்டப்படும். தொடர்ந்து தமிழ்நாட்டில் நீட்தேர்வு புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்தும், மத்திய அரசாங்கத்தால் நீட் தேர்வு திணிக்கப்படுகிறது.

இதற்காக பாஜக அரசு அச்சப்படவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை. இதனால் தான் பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒரே செங்கலை வைத்து விட்டு 3 ஆண்டுகளாக இருக்கிறார்கள். இதே போல தான் மற்ற மாநிலங்களில் மோசமான ஆட்சியை பாஜக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் மாணவர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நீட் தேர்வு மூலம் வருகிறார்கள். தமிழகத்தில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்படும் என்றார்.

Updated On: 16 Sep 2021 5:00 PM GMT

Related News