/* */

மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. தாக்குதலில் ஈடுபட்டதாக திமுகவினர் 8 பேர் கைது

HIGHLIGHTS

மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
X

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. கரூரில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை துவக்கி உள்ளனர்.

முதல் நாள் சோதனை மேற்கொள்ள வந்த போது திமுக தொண்டர்கள் வழிமறித்து சோதனை செய்யவிடாமல் தடுத்தும் மற்றும் இரவில் சீல் வைத்த போதும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரண்டு நாட்கள் சோதனை நடைபெறாத நிலையில் இன்று சோதனையை துவங்கிள்ளனர். தாரணி சரவணன் நிதி நிறுவனம் மற்றும் இரு சக்கர வாகனம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறையினரை தாக்கியதான புகாரில் 8 பேர் கைது

கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இப்பகுதியில் திமுகவினர் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. அப்போது, அதிகாரிகள் சோதனைக்கு வந்த கார் கண்ணாடியை உடைததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வருமான வரித்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திமுகவினர் 6 பேரை கரூர் மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராயனூர் பகுதியில் கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் சோதனையிட வந்த போது அதிகாரிகளை தடுத்த வழக்கில் 2 நபர்களை தாந்தோணி மலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இது தொடர்பாக பலரும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Updated On: 28 May 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!