/* */

தொடர் மழையால் இடிந்தது விழுந்த வீடுகள்

50 ஆண்டு பழமையான வீடு தொடர் மழையால் இடிந்தது. மாடியில் தங்கி இருந்த இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

HIGHLIGHTS

தொடர் மழையால் இடிந்தது விழுந்த வீடுகள்
X

மழையால் வீட்டின் முன்பக்கம் இடிந்து விழுந்தது


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை பகுதியில் 50 ஆண்டு பழமையான மாடி வீட்டில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த தேவா, ராஜு, குமார் ஆகிய மூன்று நபர்கள் தங்கி கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகின்றனர். மாடியில் உள்ள மூன்று அறைகளில், ஒன்றில் ராஜு மற்றும் குமார் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பழமையான மாடிக்கட்டிடம் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பக்க அறை மாடிப்படியுடன் இடிந்து விழுந்தது. இதனால், மாடி அறையில் தங்கியிருந்த இருவரும் வெளியேற முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு நபர்களையும் ஏணிப்படி உதவியுடன் மீட்டனர்.

Updated On: 22 Nov 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்