உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம்
அனைவருக்கும் பசி என்னும் பிணியை போக்கிட மதியஉணவு வழங்க வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தினரை கேட்டுக் கொண்டார்.
HIGHLIGHTS

கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு சாய்பாபா மற்றும் ஐயப்பன் கோவில் வளாகத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடந்த அன்னதானம்
தமிழ் திரைப்பட உலகில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இன்று மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வசிக்கக்கூடிய ஆதரவற்ற, முதியோர், பொதுமக்கள் அனைவருக்கும் பசி என்னும் பிணியை போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி மதிய உணவு வழங்க வேண்டுமென விஜய் மக்கள் இயக்கத்தினரை .கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கமேடு சாய்பாபா மற்றும் ஐயப்பன் கோவில் வளாகத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் பாலு, கரூர் நகர தலைவர் கனகராஜ், தாந்தோணி ஒன்றிய தலைவர் ஹரி, கரூர் ஒன்றிய தலைவர் அரவிந்த் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்களது பசியை போக்கினர்.