/* */

கரூர் தான்தோன்றிமலையில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பு

புரட்டாசி மாதத்தையொட்டி, தென் திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலை பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

HIGHLIGHTS

கரூர் தான்தோன்றிமலையில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பு
X

தான்தோன்றிமலை கோயிலை சுற்றிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தென் திருப்பதி என அழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்த ஆண்டு புரட்டாசி தேர்த்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாதம் பிரதி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் மற்றும் முடிக்காணிக்கை செய்ய அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது. புரட்டாசி மாதம் நேற்று துவங்கிய நிலையில் முதல் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றியுள்ள வாசல்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் வாசலில் நின்று வழிபட்டு செல்கின்றனர்.

மேலும், முடி காணிக்கை செலுத்த அனுமதி இல்லாத நிலையில், பக்தர்களுக்கு முடி காணிக்கை செலுத்தும் டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் தெரிவிக்கையில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முடி காணிக்கை செலுத்தும் பணியை தொடர்வதாக தெரிவித்தனர். பிரதி திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்திடவும் முடிக்காணிக்கை செலுத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On: 18 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?