Begin typing your search above and press return to search.
சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற கலெக்டர்
கலெக்டர் பிரபுசங்கர் சுதந்திர போராட்ட வீரரின் வீட்டிற்கு சென்று காலில் விழுந்து ஆசி பெற்று நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார்.
HIGHLIGHTS

ஆசிர்வாதம் பெறும் கரூர் கலெக்டர் பிரபு சங்கர்.
இந்தியாவின் 73 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி என்கின்ற காளிமுத்துவின் மனைவி பழனியம்மாள் வீட்டிற்கே சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அவர்களை வீடு தேடி சென்று பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார். மேலும், இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு, சுதந்திர போராட்ட வீரரின் மனைவியான பழனியம்மாள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.