/* */

கரூர் ஐடிஐயில் படிக்க செப்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கரூர் ஐடிஐயில் படிக்க செப்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
X

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூரில் உள்ள அரசினர் இருபாலர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்படிப்புகளில் சேர 15.08.2021 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:

கரூர் வெண்ணமலையில் அமைந்துள்ள அரசினர் இருபாலர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி தொழில்நுட்ப பயிற்சி, தையல் தொழில்நுட்பம், தானியங்கி வாகனங்கள் பழுதுபார்த்தல் மற்றும் மேம்பட்ட இயந்திரக் கருவிகள் இயக்குநர் உள்ளிட்ட தொழிற்கல்விப்படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றது. கணினி தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் தொழில்நுட்ப படிப்புக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு படிப்புகளும் பெண்களுக்கு மட்டுமானது.

தானியங்கி வாகனங்கள் பழுது பார்த்தல் மற்றும் மேம்பட்ட இயந்திரக் கருவிகள் இயக்குநர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தொழிற்கல்வியில் பயில ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது . ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரவிரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வெண்ணமலையில் உள்ள அரசினர் இருபாலர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தால் இலவசமாக விண்ணப்பிக்க உதவி செய்யப்படும். அரசினர் இருபாலர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் நபர்களுக்கு அரசின் சலுகைகளான மிதிவண்டி, மடிக்கணினி, காலணி, வரைபடக்ககருவிகள், தையல் இயந்திரம், சீருடை பாடப்புகத்தகங்கள், பேருந்து பயண அட்டை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.

மாவட்ட தொழில்மையம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக்கிளை உதவியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் அனைவருக்கும் உரிய வேலை கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஆர்வமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர உடனடியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டடுள்ளது.

Updated On: 13 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!