/* */

தேமுதிக, மநீம வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

கரூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கஸ்தூரி தங்கராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜ், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் பகவான் பாஸ்கர் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை தேமுதிக வேட்பாளர் கஸ்தூரி தங்கராஜ் கூட்டணி கட்சியான அமமுக கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். தேமுதிக மாவட்ட செயலாளர் கே.வி தங்கவேல், அமமுக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்ளாப்பட்டி மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவர் வரும் வழியிலேயே பேருந்து நிலைய பகுதியில் உள்ள மக்களிடையே வாக்கு சேகரித்து கொண்டே வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல, ரஜினி மக்கள் மன்ற கரூர் மாவட்ட செயலாளர் பகவான் பாஸ்கர் சுயேட்சையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், பரப்புரையில் எந்த இடத்திலும் ரஜினி பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றார்.இதேபோல, சுயேட்சை வேட்பாளர் ராசேசு. கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய தனது இரண்டு மகன்களையும் அழைத்து வந்தார். மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் மோகன்ராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Updated On: 19 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?