/* */

20 ஆண்டுகளாக மூடப்பட்ட கரூர் நொய்யல் ரயில்வே ஸ்டேஷன்; மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

karur News. karur News today- 20 ஆண்டுகளாக மூடப்பட்ட நொய்யல் ரயில்வே ஸ்டேஷன், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

20 ஆண்டுகளாக மூடப்பட்ட கரூர் நொய்யல் ரயில்வே ஸ்டேஷன்;  மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
X

karur News. karur News today- கரூர் நொய்யல் ரயில்வே ஸ்டேஷன் (கோப்பு படம்)

karur News. karur News today- கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக ரயில்வே பாதை செல்கிறது. இந்த வழியாக ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதேபோல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை திருநெல்வேலி, சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் சுற்று வட்டாரப்பகுதி மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் நலன் கருதி நொய்யல் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. பால் பண்ணையாளர்கள் இந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் பயணிகள் ரயில்கள் மூலம் காலை முதல் இரவு வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயன் அடைந்தனர்.

அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த பால் பண்ணையாளர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கிய பாலில் இருந்து வெண்ணெயை எடுத்துவிட்டு பின், அந்த பாலை நன்கு காய வைத்து பின் ஆறவைத்து, அதை தயிராக்கி கோவை, கேரளா, திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் மூலம் தினமும் பயணிகள் ரயிலில் அனுப்பி வந்தனர்.

இதேபோல் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலை சுமைகளை பயணிகள் ரயில்கள் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் மற்றும் பார்சல்கள் மூலம் வந்த வருமானம் போதாததால், நொய்யலில் செயல்பட்டு வந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டது. மேலும் இங்கு நின்று சென்ற பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ரயில் மூலம் பால், தயிர், வெண்ணெய், வெற்றிலை போன்ற பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ரயிலில் செல்ல முடியாமல் பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் சிதிலமடைந்து பல்வேறு செடி, கொடிகள் முளைத்து உள்ளன. அதே போல் கதவு, ஜன்னல் போன்றவற்றில் இருந்த மரப்பலகைகளை கரையான் அரித்து மிகவும் பழுதடைந்து உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் பாழடைந்த மண்டபமாக காட்சியளிக்கிறது. இதேபோல் ரயில்வே நடைமேடை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில் பொதுமக்கள், பயணிகள், மாணவ- மாணவிகள், வியாபாரிகள் நலன் கருதி நொய்யல் பகுதியில் சிதிலமடைந்து இருக்கும் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக ரயில்வே ஸ்டேஷன் கட்டி, நடைமேடை அமைக்கப்பட்டு பயணிகள் ரயில்கள் நொய்யலில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Jan 2023 8:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...