/* */

திருப்பூரை அடுத்து கரூர் ; வடமாநிலத் தொழிலாளர்களால் வேலை இழக்கும் உள்ளூர் மக்கள்

karur News. karur News today-வடமாநிலத் தொழிலாளர்களால், .கரூரில் வேலை வாய்ப்பை இழந்து உள்ளூர் மக்கள் தவிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரை அடுத்து கரூர் ; வடமாநிலத் தொழிலாளர்களால் வேலை இழக்கும் உள்ளூர் மக்கள்
X

karur News. karur News today - வடமாநிலத் தொழிலாளர்களால், தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு. ( கோப்பு படம்)

karur News. karur News today-கரூர் அருகே புதிதாக துவங்கப்பட்டுள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில், அதிகளவில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாக கிராம மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் ஆடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி துறையில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும்,இதே போல் வட மாநிலங்களைச் சேர்ந்த உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் தொழிலாளர்கள் வேலை தேடி வந்து தனியாகவும்,குடும்பத்துடனும் இங்கு தங்கி உள்ளனர்.

மேலும் சில வட மாநிலத்தவர் இங்கேயே ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட வற்றை பெற்றுள்ளனர். மேலும் ஆயத்த ஆடைத்துறையில் பல்வேறு காரணங்களால் வட மாநிலத்தவர் அதிகம் பணிபுரியக்கூடிய நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இது முற்றிலும் உண்மையாக உள்ளது. தமிழகத்தின் பல தொழில் நகரங்களில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் அதிக எண்ணிக்கையில், வடமாநிலத் தொழிலாளர்களே உள்ளனர்.

மேலும், தினம் தினம் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக சென்னையில் வந்து இறங்குகின்றனர். அவர்களின் குற்ற பின்னணி உள்ளிட்ட எந்த தகவலையும் பெறாமல் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று தங்கி வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் அருகே புதிதாக துவங்கப்பட்டுள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்ற நிலை ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் எங்கள் பகுதியில் சிமெண்ட் நிறுவனம் புதிதாக துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தில் அதிக அளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, எங்கள் பகுதியில் படித்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள இளைஞர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊர் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்றும் வட இந்திய தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கவனம் தேவை

இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் வடமாநிலத்தவர் வாழும் மாநிலமாக மாறிவிடும். தொழிலாளர்களாக உள்ள பலரும், நல்ல வருமானம் ஈட்டி சொந்த வீடு, தொழில் என இங்கேயே நிரந்தரமாக வாழும் நிலை உருவாகி விட்டால், தமிழர்களின் பூர்வீகம், எதிர்காலத்தில் வடமாநில மக்கள் வாழும் மாநிலமாக மாறுவது சாத்தியமாகும். திருமணம், அரசியல் குறுக்கீடுகள் போன்று இன்னும் பல விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும்.இனியாவது, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலையை கொஞ்சம் மாற்றிக்கொண்டு, நமது வாழ்விடத்தை தக்க வைத்துக்கொள்வது மிக முக்கியம்.

Updated On: 1 Jan 2023 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு