/* */

புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவில் மண்டலாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம்

கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவில் மண்டலாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம்
X

புகழிமலை முருகன் கோவில் மண்டலாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம்

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோயில்.

பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனும், அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளை போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. புகழூர் என்று அழைக்கப்படும் இக்குன்று அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களைப் புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது

புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேகம் வருகிற 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 48 நாள் நிறைவு பெறுகிறது. மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பணி குழு தலைவரும், நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். திருப்பணிக்குழு துணைத் தலைவர் அண்ணாவேலு, திருப்பணிக்குழு துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கட்டுப்பட்ட அனைத்து ஊர் கொத்துக்காரர்கள் மற்றும் புகழூர் வட்டார ஆன்மிக நண்பர்கள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு 48-ம் நாள் மண்டலாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை தெரிவித்தனர்.

Updated On: 1 May 2023 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!