/* */

கரூரில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என ஓபிஎஸ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கரூரில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும்: ஓபிஎஸ்
X

ஓபிஎஸ்.

கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் புகழூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். ராஜ்ய சபா உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அதிமுக கட்சி அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 1972ல் அதிமுக தொண்டர்களுக்காக துவக்கப்பட்டது. 3 முறை யாராலும் வெல்ல முடியாத முதல்வராக இருந்து சிறப்பான, சாதனை ஆட்சியை நடத்தி காட்டினார். அதனை தொடர்ந்து அம்மா தொலை நோக்கு திட்டங்களை பார்த்து, பார்த்து நடத்தினார்கள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி நாலரை வருடம் காலம் ஆட்சி செய்த வரலாறு அதிமுகவிற்கு உண்டு.

இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று சூழ்ச்சிகளை திமுக செய்ததது. தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களுடன் வளர்ந்து நிற்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தந்தவர் அம்மா. 50 லட்சம் வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கு கட்டித் தந்தார்கள்.

தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை வழங்கினார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசு தான். காவிரி பிரச்சினையில் விசாரணை செய்து 2012ம் ஆண்டு காவிரி மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது.

திமுக பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதனால் ஆட்சிக்கு வந்து ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீட் தேர்வு ஒழிப்பு தான் முதல் கையெழுத்து என்றார்கள். நடைபெற்றதா, நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக பேசிய இறுதி வரை சட்டப் போராட்டம் நடத்துவது தான் என்று பேசிவருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பை பார்த்து நாடே சிரிக்குது, ஒரு பைசா கொடுக்க வக்கில்ல. அரிசி பிரித்தாலே நாற்றம் அடிக்குது, வெல்லம் தண்ணியா உருகி போச்சு, வட நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி கொடுத்தார்கள். அரிசியை மாட்டுக்கு கொடுத்தால் முறைத்து பார்க்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் நடந்துள்ளது. அம்மாவிற்கும், எம்ஜிஆருக்கும் துரோகம் செய்த அனைவரும், அதன் பலனை அனுபவிப்பார்கள். அதிமுகவின் சரித்திரத்தை எடுத்துப் பாருங்கள். சாதாரண தொண்டன், கழக ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணப்பாளராக வர முடியும். இது தொண்டர்கள் கட்சி.

கரூர் மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி 100% பெறுவார்கள் அடுத்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் அடுத்த புத்தகம் இதே மண்டபத்தில் நடைபெறுகிறது அதிமுக சார்பில் நகர்ப்புற சேரிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வெற்றி கூட்டத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்றார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து வெற்றி பெறும் வேண்டுமென வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 11 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!