/* */

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் மனைவி, தம்பி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக 2.68 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
X

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக 2.68 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் சகோதரரின் வங்கி லாக்கர்களை முடக்கி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 22 ம் தேதி சென்னை, கரூரில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் உட்பட, 26 இடங்களில் சோதனை நடத்தி, 25.50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்களை திரட்ட, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது தன் உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில், விஜயபாஸ்கர் சொத்து குவித்து இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் விஜயபாஸ்கர் மனைவி, சகோதரர் மற்றும் பினாமிகளின் வங்கி லாக்கர்களை சோதனையிட முடிவு செய்து விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோரது வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டது.

இதற்காக வங்கியிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முன்னிலையில், லாக்கர்களை திறந்து சோதனை நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தானர். இந்நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரின் மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக 2.68 கோடி சொத்து சேர்த்தாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 25 July 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?