/* */

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி - தெரியாத சில சுவையான தகவல்கள் | Karunanithi Birthday

Muthamil Arignar Kalaignar -கலைஞர் மு. கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த சுவையான தகவல்கள்.

HIGHLIGHTS

Karunanidhi birthday
X

Muthamil Arignar Kalaignar -தமிழ் அறிஞரும், தமிழக அரசியலில் விடிவெள்ளியாகவும் திகழ்ந்தவர், திமுக தலைவரான, முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி. இன்று அவரது 99வது பிறந்த நாளில், அவர் குறித்த சில சுவையான தகவல்கள் இதோ உங்களுக்காக.

  • திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் கலைஞர் கருணாநிதி.
  • பெற்றோருக்கு கருணாநிதி 3வது குழந்தை. பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் கலைஞருக்கு உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும், முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
  • கருணாநிதி, 8ம் வகுப்பு படிக்கும் போது 1939ம் அண்டில் முதல் முறையாக மேடையில் பேசினார். அதன் தலைப்பு 'நட்பு' என்பதாகும்.
  • கருணாநிதி, 3 திருமணம் செய்துகொண்டவர். முதல் மனைவி பத்மாவதிக்கு பிறந்தவர், மு.க.முத்து. இரண்டாவது மனைவி தயாளுவின் மகன்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. மூன்றாவது மனைவி ராஜாத்தியின் வாரிசு கனிமொழி.
  • கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
  • கடந்த 1950களில் தொடங்கி 70கள் வரை, சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்பட பலரின் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய கருணாநிதிக்கு, பராசக்தி, மனோகரா, பூம்புகார், மந்திரி குமாரி உள்ளிட்ட சினிமாக்கள் முத்திரையை பதித்தன.
  • கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
  • கருணாநிதி, 13 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்; ஒரு தேர்தலில்கூட அவர் தோல்வி அடைந்ததில்லை.
  • 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
  • கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று.
  • எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.
  • உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி.
  • கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.
  • மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.
  • ராஜாஜி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சியில் அரசியல் செய்திருக்கிறார் கலைஞர்.
  • 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
  • வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி சென்னையில் காலமான கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கான இடம் பெறுவதில் நீதிமன்றம் சென்று திமுக வென்றது; இறந்தும் வென்றார் கலைஞர் என்று திமுகவினர் இன்றும் நினைவு கூறுவதுண்டு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Feb 2024 5:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?