/* */

குமரியில் ஊரடங்கு விதிமீறல்-ஒரே நாளில் 2373 பேருக்கு அபராதம்,62 வாகனங்கள் பறிமுதல்

குமரியில் ஒரே நாளில் 2373 பேருக்கு அபராதம் 62 பேர் மீது வழக்கு பதிவு 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

குமரியில் ஊரடங்கு விதிமீறல்-ஒரே நாளில் 2373 பேருக்கு அபராதம்,62 வாகனங்கள் பறிமுதல்
X

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி அவசிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் முககவசம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 2303 பேர் மீதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 70 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Updated On: 11 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  2. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  3. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  4. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  5. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  6. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு