குமரியில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியில் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்
X

கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் கடல்பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் பூவார் அருகே புதியதுறை மீனவ கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் தங்களது பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முயன்றனர்.

அப்போது கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் படகு கடல் அலையில் சிக்கி அந்தரத்தில் பறந்து விபத்தில் சிக்கியது. படகு கவிழாமல் இருக்க மீனவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டும் பயனில்லாமல் போனது.

இதனால் ஆபத்தை உணர்ந்த மீனவர்கள் படகில் இருந்து கடலில் குதித்து தப்பித்தனர். மேலும் படகு கரை பகுதியிலேயே கடல் அலையில் சிக்கி கவிழந்தது.

இந்த விபத்து நிகழ்வதை கண்ட அந்த பகுதி மீனவர்கள் ஓடி சென்று விபத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 13 Oct 2021 3:30 AM GMT

Related News