/* */

குமரியில் கொட்டி தீர்த்த பரவலான மழை: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை

குமரியில் கொட்டி தீர்த்த பரவலான மழை காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் கொட்டி தீர்த்த பரவலான மழை: தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
X

அருவியில் வெள்ளப்பெருக்கால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது, வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது, இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலான மழை கொட்டி தீர்த்தது. சுமார் 4 மணி நேரங்களை கடந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தற்போது 2700 கன அடி உபரி நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மழை தொடர்ந்தால் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Updated On: 1 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?