மரத்தில் கட்டி வைத்து பள்ளி மாணவர் மீது தாக்குதல் - தடுக்க சென்ற தாய்க்கும் அடி

குமரியில் பள்ளி மாணவன் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார். தடுக்க சென்ற தாயையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மரத்தில் கட்டி வைத்து பள்ளி மாணவர் மீது தாக்குதல் - தடுக்க சென்ற தாய்க்கும் அடி
X

பள்ளி மாணவன் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவ வீடியே வைரலாகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது 18 வயது மகன் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பிராண்ட் எல்டின் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை மாணவன் திருடியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாணவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிராண்ட் எல்டின் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேர் சேர்ந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று அந்த மாணவனை அடித்து இழுத்து வந்து மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க சென்ற ராஜேஸ்வரியையும் தாக்கியுள்ளனர், இவர்கள் இருவரும் தற்பொழுது பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பூதப்பாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதனிடையே மாணவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 15 Sep 2021 1:00 PM GMT

Related News