குமரியின் இரு துருவங்கள் நேருக்கு நேர் சந்திப்பு

குமரியில் இரு துருவங்களாக செயல்படும் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குமரியின் இரு துருவங்கள் நேருக்கு நேர் சந்திப்பு
X

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து கைகொடுத்து பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் வந்திருந்த பொன் இராதாகிருஷ்ணனை காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் சந்தித்தார்.

அப்போது பொன். இராதாகிருஷ்ணனுக்கு கைகொடுத்து விஜய் வசந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோன்று பொன்.இராதாகிருஷ்ணனும் விஜய் வசந்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

குமரியில் இரு துருவங்களாக செயல்படும் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது, இருவரின் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

Updated On: 2021-03-20T08:46:01+05:30

Related News