டவ்-தே -மகளின் திருமணத்திற்கு வந்த கப்பல் ஊழியர் புயலில் சிக்கி மாயம்.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டவ்-தே -மகளின் திருமணத்திற்கு வந்த கப்பல் ஊழியர் புயலில் சிக்கி மாயம்.
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பரதர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரிபால் சேவியர் 60. இவருக்கு சுபா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பலில் மோட்டார் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார்.

இவரது மூத்த மகளின் திருமணம் இந்த மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு அவர் ஊருக்கு வருவதற்காக மங்களூரில் இருந்து கொச்சி வந்த கப்பலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கப்பலிலிருந்து சேவியர் கடலுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அவரை அந்த கப்பலில் இருந்தவர்கள் தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தேடிய பிறகும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இரண்டு நாட்கள் ஆனதால் அவரை தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக சொந்த ஊர் வந்த போது கடலில் விழுந்து மாயமான ஹரிபால் சேவியரை மத்திய மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 18 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
 2. வாணியம்பாடி
  பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் தாலுகாவில் 31 பேருக்கு கொரோனா இறப்பு நிவாரண நிதி வழங்கல்
 4. தேனி
  தென்காசியில் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம்
 5. தென்காசி
  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதிக்கு தென்காசியில் மவுன...
 6. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
 7. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத்திற்கு பாஜகவினர் அஞ்சலி
 8. ஈரோடு
  ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 9. ராணிப்பேட்டை
  விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்: கலெக்டர்
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு