பெண் போலீசை லூசு என திட்டிய திமுக சட்டமன்ற உறுப்பினர் - வீடியோ வைரல் ஆனது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண் போலீசை லூசு என திட்டிய திமுக சட்டமன்ற உறுப்பினர் - வீடியோ வைரல் ஆனது
X

சட்டமன்ற பொது தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாக்குபதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு தனது கட்சியினர் பலருடன் வந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும் நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளருமான சுரேஷ்ராஜன் கூட்டமாக வாக்குபதிவு மையத்திற்கு செல்ல முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் தேவையின்றி இத்தனை பேர் இங்கு ஏன் வருகிறீர்கள் வேட்பாளர் மட்டும் வாருங்கள் என கூறினார். இதனைத் தொடர்ந்து திமுகவினர் அந்த பெண் போலீஸ் தாமரைக்கு வாக்கு கேட்பதாக பிரச்சினையை மாற்றி தாறுமாறாக திட்டினர்.

தொடர்ந்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் அந்தப் பெண் போலீசை பார்த்து லூசு என்று திட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமனப்படுத்தி வைத்தார்.

முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர் பெண் போலீசை பார்த்து லூசு என்று கூறிய சம்பவம் அங்கிருந்த போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் போலீசை சட்டமன்ற உறுப்பினர் லூசு என திட்டும் வீடியோ வைரலாகி உள்ளது.

Updated On: 8 April 2021 10:15 AM GMT

Related News