கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் - அதிரடி காட்டிய மாநகராட்சி.

கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெற்றதால் அதிரடி காட்டி அபராதம் விதித்த மாநகராட்சி.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரம் - அதிரடி காட்டிய மாநகராட்சி.
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் வியாபாரம் நடப்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் IAS உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா தலைமையில் வருவாய் உதவியாளர்கள் சுதீஷ், ஜெகதீஷ்குமார், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட டீம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது செம்மாங்குடி ரோடு பகுதியில் அரசின் தடையை மீறி ஜவுளி கடைக்கு செயல்பட்டதும், பின் வாசல் வழியாக பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் மேற்கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் கடையை இழுத்து மூடினர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள ஆணையர் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சி வாட்ஸ்அப் எண்ணிற்கு ( 9487038984 ) புகார் அனுப்புமாறு கூறி உள்ளார்.

Updated On: 17 Jun 2021 4:30 PM GMT

Related News

Latest News

 1. சூலூர்
  இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
 2. திருநெல்வேலி
  நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வரைவு வாக்காளர் பட்டியல்...
 3. கிருஷ்ணராயபுரம்
  புலியூரில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
 4. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
 5. பாபநாசம்
  திருப்பாலத்துறை பாலைவனநாதர் சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை...
 6. போளூர்
  மறைந்த மருத்துவர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை
 7. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
 9. கும்பகோணம்
  சுவாமிமலை அருகே உரக்கடையை சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
 10. வழிகாட்டி
  ஈரோட்டில் கோழி வளர்ப்பு இலவச பயிற்சி: பங்கேற்க நீங்கள் தயாரா?