/* */

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு - பாஜக எம்.எல்.ஏ கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு.

HIGHLIGHTS

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு - பாஜக எம்.எல்.ஏ கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
X

தமிழகத்தில் நோய் தொற்று தாக்கம் குறையாத நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்துள்ள அரசு, நோய் தொற்று அதிகம் காணப்படும் 11 மாவட்டங்களை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் டாஸ்மார்க் கடைகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

இதனிடையே அரசின் முடிவிற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.ஏற்கனவே நோய் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் முழு ஊராடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு தற்போது அரசு அறிவித்துள்ள டாஸ்மார்க் கடை திறப்பு என்பது மேலும் வேதனை அடைய செய்யும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 147 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என கூறியும், நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி தனது வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தியும் கண்டன பதாகைகளை ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதே போன்று குமரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தங்கள் வீடுகளின் முன்பு குடும்பத்தினருடன் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Jun 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?