/* */

கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குமரியில் பிரசித்தி பெற்ற கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

நாகர்கோவிலில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புனித சவேரியாருக்கு என கட்டப்பட்ட முதல் பேராலயமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக சிறப்பு திருபலியுடன் கூடிய பிரார்த்தனை, திருக்கொடி அர்ச்சிப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் திருப்பலி, மலையாள திருப்பலி, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன, மேலும் வரும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதியில் திருதேர் மற்றும் சப்பர பவனியும் நடைபெற உள்ளது.

Updated On: 25 Nov 2021 2:15 PM GMT

Related News