/* */

நீர் நிலைகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்கு என்ன - மாநகராட்சி விளக்கம்

நீர் நிலைகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்கு என்ன என்பது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

HIGHLIGHTS

நீர் நிலைகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்கு என்ன -  மாநகராட்சி விளக்கம்
X

பைல் படம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால்கள் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் என்பது நம் பகுதிகளில் பெய்யும் மழை நீரை அருகில் உள்ள குளங்களுக்கும், ஆறுகளுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் இன்று நம்முடைய பொறுப்பின்மையால் அது கழிவு நீர் ஓடைகளாகவும், சாக்கடைகள் ஆகவும் மாறியுள்ளது.

சில காலங்கள் முன்பு நாம் நம் வீட்டிலேயே கழிவுகளை அகற்றினோம், அப்பொழுது பிளாஸ்டிக் பயன்பாடு மிக குறைவாக இருந்த நேரம்,

எல்லோரும் ஒரு துணிப் பையை எடுத்துக்கொண்டு கடைகளுக்கு செல்வோம்.அன்று நம் வீட்டு கழிவு நீரை நம் வீட்டு வளாகத்திலோ அல்லது தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு செலுத்துவோம்.

அந்த நேரத்தில் நம் நாகர்கோவில் மாநகரம் பசுமை நிறைந்து இருந்தது,நகர் முழுவதும் அழகிய நீர்நிலைகள் அமையப் பெற்றிருந்தது. இதனால் தண்ணீர் தூய்மையாக இருந்தது, காற்று புத்துணர்ச்சியாக இருந்தது.

ஆனால் நாம் படிப்படியாக நம் தேவைக்காக நம் சுயநலத்திற்காக இந்த இயற்கை தந்த கொடை அழிக்க ஆரம்பித்தோம். நாம் பயன்படுத்திய கழிவுநீரை மழைநீர் வடிகால்கள் மூலமாக குளங்களிலும் ஆறுகளிலும் கொண்டு சென்று அவற்றை மாசு படுத்தினோம்.

துணி பையை மறந்து பிளாஸ்டிக் பையை கையில் எடுத்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறோம்

வீடுகளில் சேரும் குப்பைகளை வீட்டிலேயே மக்கி உரமாக்குவதை மறந்து தெருக்களில் தூக்கி வீசி ஆரம்பித்தோம்.

இவ்வாறு நம் சுற்றுச்சூழலின் சீரழிவைத் நாமே தொடங்கினோம் தற்பொழுதும் அதை செய்து வருகிறோம்.

நடந்ததை மறப்போம் மீண்டும் நம் நாகர்கோவில் மாநகரத்தை பசுமை மாநகராக மாற்ற முயற்சி மேற்கொள்வோம்.

தற்பொழுது நம் மாநகராட்சி சார்பாக உங்கள் வீடுகளில் தினசரி வரும் மக்கும் குப்பைகளை பைப் கம்போஸ்டிங் முறையில் உங்கள் வீடுகளிலேயே இயற்கை உரமாக மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அதிகபட்சமாக 2 × 2 இடம் தேவை அல்லது உங்கள் வீட்டில் உள்ள இரண்டு வாளிகள் மூலமாகவும் இதனை செயல்படுத்தலாம்.

மேலும் மாநகராட்சி பகுதி முழுவதிலும் உள்ள குப்பைகளை நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாகவும் பயோ மைனிங் முறையிலும் இயற்கைஉரமாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதுபோல நம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, மழைநீர் வடிகாலில் விடாமல் நம் வீட்டுப் பகுதியிலேயே ஒரு உறைகுழி அமைத்து அதில் விடலாம்.

இதன் மூலம் நம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இயற்கை முறையிலேயே உறைகுழி மூலமாக சுத்திகரிக்கப்பட்டு பூமிக்குள் செலுத்தப்படுகின்றது.

உறைகுழி என்பது கிட்டத்தட்ட நம் மழைநீர் சேகரிப்பு போன்றவை, இதனை நாம் நம் வீடுகளில் செயல்படுத்துவதால் கழிவு நீரானது மழைநீர் வடிகால்கள் மூலமாக குளங்களிலும் ஆறுகளிலும் கலக்கப்படுவது தவிர்க்கப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்படும்.

இது நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையாகும், என நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Updated On: 7 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்