புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் :எம்.ஆர்.காந்தி வாக்குறுதி

புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று பா.ஜ.க வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் :எம்.ஆர்.காந்தி வாக்குறுதி
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி இன்று ஒழுகினசேரி சோழராஜா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நாகர்கோவில் தொகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்க உங்களில் ஒருவராக இருந்து பாடுபடுவேன் எனவும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொண்டு உங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நாகர்கோவில் தொகுதியில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இத்திட்டம் முழுமை பெறும் போது நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தரதீர்வு கிடைக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Updated On: 30 March 2021 5:45 PM GMT

Related News