மாநகராட்சியின் முறையான அணுகுமுறை - மகிழ்ச்சி அடையும் இளைய தலைமுறை.

மாநகராட்சியின் முறையான அணுகுமுறையால்இளைய தலைமுறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாநகராட்சியின் முறையான அணுகுமுறை - மகிழ்ச்சி அடையும் இளைய தலைமுறை.
X

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் அரசின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஆரம்ப காலத்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு தயக்கம் காட்டிய பொதுமக்கள் தற்போது தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.குறிப்பாக இளைய தலைமுறையினர் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இளைஞர்களை கவரும் விளம்பரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வட்டங்கள் அமைப்பது பொதுமக்களை காத்திருக்க வைக்காமல் தடுப்பூசி இருப்பிற்கு ஏற்ப டோக்கன் கொடுத்து மீதமுள்ள பொதுமக்களை மற்றொரு முகாமில் ஊசி செலுத்தி கொள்ளலாம் என அன்புடன் தெரிவிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் நிலையில் பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

குறிப்பாக நான் ஊசி போட்டு விட்டேன் நீங்கள் போட்டு விட்டீர்களா என மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளில் இளைய தலைமுறையினர் நின்று போட்டோ எடுத்துக் கொள்வது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Updated On: 13 Jun 2021 1:45 PM GMT

Related News