/* */

குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டு பொங்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டு பொங்கல்
X

 நாகர்கோவிலில், மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாட்டுக்கு படையலிடப்பட்டது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். உழவர்களின் உற்ற தோழனாக இருக்கும் மாட்டுக்கு, நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த மாட்டு பொங்கல் விழாவானது, நெல் விவசாயத்தை முதன்மை விவசாயமாக கொண்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி மாடு வளர்க்கப்படும் வீடுகள், கோசாலைகள் போன்றவற்றில் மாடுகளை சுத்தம் செய்த பொதுமக்கள் மாட்டிற்கு, மலர் மாலை அணிவித்து தீப ஆராதனை காட்டி பொங்கல் வைத்து, அந்த உணவை மாட்டிற்கு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாட்டிற்கு இனிப்புகள், பழங்கள் வழங்கி உற்சாகத்துடன் பொங்கலை கொண்டாடினர்.

Updated On: 15 Jan 2022 10:30 AM GMT

Related News