நாகர்கோவிலில் அ. ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக முதல்வரின் தாயார் குறித்து அவதூராக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாகர்கோவிலில் அ. ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
X

தமிழக முதல்வரின் தாய் குறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அ. ராசா அவதூராக பேசினார்,இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு பொதுமக்கள் மத்தியிலும் தாய்குலங்கள் மத்தியிலும் எழுந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் அ. ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது,

அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வரின் தாய் குறித்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட ஆவின் பெருந்தலைவருமான அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அ. ராசாவுக்கு எதிராகவும் திமுகவிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 30 March 2021 6:00 PM GMT

Related News