இந்து மகாசபா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாகக்கூறி ஆர்ப்பாட்டம்

இந்து மகா சபா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, நாகர்கோவிலில் அகிலபாரத இந்து மகா சபா சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்து மகாசபா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாகக்கூறி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபாவினர். 

வங்கதேச இன படுகொலைக்கு எதிராக, அகில பாரத இந்துமகா சார்பில் அண்மையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி விடுதலை ஆன கோவை மாவட்டத்தை சேர்ந்த கோவை மண்டல இளைஞரணி தலைவர் பாக்சர் பிரேம் மீது, மீண்டும் பொய் வழக்கு போடவும் அவரை கைது செய்யவும் காவல்துறை முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் என்பவரின் காரை சேதப்படுத்திய குற்றவாளிகளை கண்டு பிடிக்கக்கோரியும், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, அகில பாரத இந்து மகாசபா சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் மாநில தலைவரும், தேசிய துணை தலைவருமான பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 24 Nov 2021 10:30 AM GMT

Related News