/* */

தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்

நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் குறைகளை கேட்டறிந்தார்

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்
X

தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா முதல் அலை தொடங்கி தங்கள் இன்னுயிர் குறித்து கவலைப்படாமல் பணியாற்றி வருவதோடு தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே அதிக வேலைப்பளு மற்றும் ஒப்பந்ததாரர்கள் சரியான ஊதியம் வழங்காமல் காலம் தடுத்ததாக இவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் குறைகளை கேட்டறிந்தார். தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த அவர் குறைகளை கேட்டு அறிந்ததோடு வரும் நாட்களில் அவர்களின் பணிகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.

Updated On: 11 Nov 2021 1:30 PM GMT

Related News