இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தலைமை காவலர் உட்பட 2 பேர் படுகாயம்

குமரியில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தலைமை காவலர் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தலைமை காவலர் உட்பட 2 பேர் படுகாயம்
X

புத்தேரி மேம்பாலத்தில் நடந்த விபத்தில் தலைகீழாக கவிழ்ந்த .சொகுசு கார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். 51 வயதான இவர் நேசமணிநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் புத்தேரி மேம்பாலத்தில் நீலகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, எதிரே அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இச்சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நீலகண்டன் தூக்கி வீசப்பட்ட நிலையில் அவர் மீது கார் உரசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 2:15 PM GMT

Related News