/* */

குமரியில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு

குமரியில் விளையாட்டு குழுவில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
X

குமரியில் விளையாட்டு குழுவில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளையாட்டு மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பொருளுக்கு பழகி கொள்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும், போதை பொருள்கள் பயன்படுத்துதல் சம்பந்தபட்ட தகவல்களை காவல்துறைக்கு அறிவித்தல் போன்றவையும் விளக்கப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவல்களை மறைக்காமல் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தல், குழந்தைகளை பாலியல் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்து கூறியும், நடைமுறைகளை விளக்கி கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 21 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  2. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  5. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  6. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  7. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  9. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  10. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!