அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிப்பு

குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டி, விளம்பரங்கள் மற்றும் சுவரெழுத்துக்களை மறைக்கும் பணி தீவிரம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிப்பு
X

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனை தொடர்ந்து மாவட்டம் தோறும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர் வைத்திருக்கும் கொடி கம்பங்கள், சுவொரொட்டி விளம்பரங்கள் மற்றும் சுவரெழுத்துக்கள் போன்ற விளம்பரங்கள் செய்திருப்பதை கண்டறிந்து, அதனை மாற்றும் முயற்சியில் தேர்தல் கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த ராகுல்காந்தியை வரவேற்கும் விதமாக பல்வேறு சுவரொட்டி விளம்பரங்கள் மற்றும் சுவரெழுத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது இதனை ஏழுதேசம் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்க்காக கலர் கலராக இருந்த சுவர்களை வெள்ளை அடித்து அழித்து வருகின்றனர். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 5 நாட்கள் கடந்த பின்பும் இதுவரை பல அரசியல் கட்சியினர் பொது இடங்களில் வைத்திருந்த கட்சி பேனர்கள், கொடிகளை அகற்றாமல் இருந்து வருகின்றனர்.

Updated On: 2 March 2021 5:15 PM GMT

Related News