ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் உற்சவம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் உற்சவம்
X

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் உற்சவம் நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் உள்ள பண்டார அடுப்பு என்று அழைக்கப்படும் பிரதான அடுப்பில் கோவில் தந்திரி தீ பற்ற வைத்து பொங்கல் உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோவிலை சுற்றி உள்ள 13 கிலோ மீட்டர் தூரம் அளவில் பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.கடந்த காலங்களில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அதன்படி நான்குமுறை கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த இந்த பொங்கல் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக களை இழந்தது.

அதன்படி கோவில் வளாகம் மற்றும் பொது இடங்களில் பொங்கல் வைக்க கூடாது என்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தது.அதன்படி அனைவரும் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கடந்த முறை 36 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்ட நிலையில் இந்த வருடம் சுமார் 2 லட்சம் பெண்களே பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இது குறித்து பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது லட்சக்கணக்கில் பெண்கள் கூடி வெகு விமர்சையாக நடைபெற வேண்டிய பொங்கல் உற்சவம் கொரோனா பரவல் காரணமாக களை இழந்து உள்ளது. இனி வரும் காலத்தில் மிக மிக விரைவில் கொரோனா காணாமல் போக வேண்டும். அடுத்த வருடம் மீண்டும் பழைய பொங்கல் உற்சவத்தை நாங்கள் காண வேண்டும். இதற்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் அருள் புரிய வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Updated On: 28 Feb 2021 4:00 AM GMT

Related News

Latest News

 1. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 2. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
 3. தேனி
  போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
 4. திருநெல்வேலி
  நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு...
 5. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
 6. இந்தியா
  அடுத்த முப்படை தலைமைத்தளபதி யார்? நரவனே நியமிக்கப்பட வாய்ப்பு
 7. ஈரோடு
  ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
 8. சிவகங்கை
  பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு...
 9. கள்ளக்குறிச்சி
  உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...
 10. தர்மபுரி
  தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...