குண்டர் சட்டத்தில் இரண்டு வாலிபர்கள் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குண்டர் சட்டத்தில் இரண்டு வாலிபர்கள் கைது
X

கன்னியாகுமரியை சேர்ந்த 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காவல்துறை எச்சரிக்கையை மீறி செயல்படும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி மங்காடு பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்(30), மற்றும் திருவட்டார் பகுதியை சேர்ந்த சேகர் (42) ஆகியோரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொல்லங்கோடு, திருவட்டார், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு, கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தொடர்ந்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Feb 2021 6:30 AM GMT

Related News