/* */

கன்னியாகுமரி: மெஷினில் எடை போட்டு கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

குமரியில் மெஷினில் எடை போட்டு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி: மெஷினில் எடை போட்டு கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
X

கைதானவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதி சங்குருட்டி பகுதியில், 3 பேர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போலீசார், அவர்களிடம் பொருட்கள் எடை போடும் ஒரு மெஷின் மற்றும் ஒரு பை இருந்துள்ளதை கண்டனர்.

அது சம்பந்தமாக, 3 பேரிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை பிரித்து பார்த்த போது, 1 கிலோ மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். 1 கிலோ கஞ்சா மற்றும் எடை மெஷினையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் குழித்துறை பகுதியை சேர்ந்த அர்ஷத் அலி 20, அழகியபாண்டிபுரம் பகுதியை சேர்ந்த ஜோண் கிறிஸ்டோபர் 32, களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஆண்டணி தாஸ் 38 என்பதும், கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Updated On: 7 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?