/* */

அனைத்து கோவில்களிலும் மாதம் ஒருமுறை உழவாரப்பணி: அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், மாதம் ஒருமுறை உழவாரப்பணி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

HIGHLIGHTS

அனைத்து கோவில்களிலும் மாதம் ஒருமுறை உழவாரப்பணி: அமைச்சர் சேகர்பாபு
X

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு. 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள புராதன மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு பின்னர் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமார் ஒன்பது ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த மூலிகை ஓவியங்களை, தற்போது சீரமைத்துள்ளோம். இது தொடர்பான ஆய்வறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, 2014ஆம் ஆண்டு இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

அதற்கு பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மண்டல குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்ற பின்னர் மாநிலக்குழு அதன் பின்பு நீதிமன்ற குழு என அனைத்து ஆய்வு மற்றும் அறிக்கைகள் கிடைத்த பின்னர், விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதம் ஒருமுறை உழவாரப் பணிகள் நடைபெறும். கோவில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது குறித்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அந்த வழக்க்கு முடிந்த பின்னர் தமிழக முதல்வரின் ஒப்புதலோடு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

Updated On: 24 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்