/* */

நிஜ காட்சியை மிஞ்சிய போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நிஜ காட்சியை மிஞ்சிய போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்களை கவர்ந்தது.

HIGHLIGHTS

நிஜ காட்சியை மிஞ்சிய போலீசார் விழிப்புணர்வு ஒத்திகை
X

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தால் போலீசார் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சி நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தால் எத்தகைய சூழ்நிலை நிலவும் என்பதை ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

குண்டு வெடிப்பில் சிக்கி சிலர் ரத்தக் காயத்துடன் உடல் சிதறி கிடப்பது போன்றும், உயிருக்கு போராடும் சிலரை போலீசார் மீட்பது போன்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது போன்றும் போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். நிஜ காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு போலீசார் காட்டிய ஒத்திகை நிகழ்ச்சி அங்கு கூடி நின்ற பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

Updated On: 17 Jun 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?