சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரியில் பிரசித்தி பெற்ற சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது.
X

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியில் தொடங்கிய தைத்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியில் தைத்திருவிழா தொடங்கியது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருடத்திற்கான தை திருவிழா இன்று 14-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு பணிவிடையும், பதியை சுற்றி ஊர்வலமும் நடைபெற்றது.தொடர்ந்து தலைமை பத்தி குரு பாலஜனாதிபதி தலைமையில் குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதனிடையே திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என தலைமை பதி குரு பாலஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 14 Jan 2022 3:15 PM GMT

Related News