/* */

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கலை இழந்த கன்னியாகுமரி: வியாபாரிகள் கவலை

சீசன் நேரத்தில் கன்னியாகுமரி சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கலை இழந்த கன்னியாகுமரி: வியாபாரிகள் கவலை
X

சபரிமலை சீசன் நேரத்தில் சுற்றுலா பயணிகள் குறைவால் வெறிச்சாேடி காணப்படும் கன்னியாகுமரி.

முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள கடற்கரைகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.

மேலும் சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் போன்றவற்றையும் பார்த்து ரசிப்பதோடு கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வானுயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை சொகுசு படகில் சென்று பார்த்து ரசிப்பார்கள்.

அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காலமான நவம்பர் 15 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரையிலான 70 நாட்களும் பல ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் கன்னியாகுமரி களைகட்டும். இதனிடையே அய்யப்ப சீசன் தொடங்கிய பிறகும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கன்னியாகுமரி கலை இழந்து உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீடித்து வரும் கனமழை கவனமாகவும் சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு கேரள தேவசம் போர்டு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வருகை 10 சதவிகிதமாக குறைந்து உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் நின்றதால் முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி ஆள் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அங்கு கடைவைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளத்தோடு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா காரணமாக பல மாதங்களாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ள வியாபாரிகள் சீசன் காலமும் கை விட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக தெரிவித்தனர்.

Updated On: 24 Nov 2021 1:15 PM GMT

Related News