/* */

குமரியில் தாெடர் மழை எதிராெலி: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முடல்

குமரி மாவட்டத்தில் நேற்று நான்காவது நாளாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மலையோர பகுதிகளிலும் மழை இருந்தது.

HIGHLIGHTS

குமரி மாவட்டத்தில் நேற்று நான்காவது நாளாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மலையோர பகுதிகளிலும் மழை இருந்தது.

ஆனால், சாரல் மழையாக மட்டுமே இருந்ததால் அணைகளுக்கான நீர்வரத்து நேற்று காலை கணிசமாக குறைந்தது. நேற்று முன்தினம் காலை பேச்சிப்பாறை அணைக்கு 3,010 கன அடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று காலை அது 2,133 அடியாக குறைந்தது. அணையிலிருந்து 5,088 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று காலை அணை மூடப்பட்டது. நீர்மட்டம் 42.92 அடியாக இருந்தது. நேற்று காலை முதல் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 43 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 70.50 அடியாக உள்ளது. அணைக்கு 635 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மூடப்பட்டு, உபரி நீரும் வெளியேற்றப்படவில்லை.

சிற்றாறு -1ல் ஒன்றில் 16.07 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றாறு -2ல் 16.17 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 27.90 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 27.90 அடியும் நீர்மட்டம் உள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 25 அடியாக உள்ளது. அணைகள் மூடப்பட்டதை தொடர்ந்து, கோதையாறு இடதுகரை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினர்.

நேற்று காலை வரையிலான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பூதப்பாண்டி 1.2, சிற்றாறு 1- 15, களியல் 14.2, கன்னிமார் 8.2, கொட்டாரம் 9.4, குழித்துறை 7.8, மயிலாடி 5.2, நாகர்கோவில் 4.6, பேச்சிப்பாறை 22, பெருஞ்சாணி 2.4, புத்தனை 1.8, சிற்றாறு 2- 7, சுருளகோடு 8.4 , தக்கலை 3, குளச்சல் 8.6, இரணியல் 8, பாலமோர் 13.2, மாம்பழத்துறையாறு 6, ஆரல்வாய்ெமாழி 3, கோழிப்பாேர்விளை 8, அடையாமடை 5, குருந்தன்கோடு 9.8, முள்ளங்கினாவிளை 11.2, ஆனைகிடங்கு 7.2, முக்கடல் 5.

Updated On: 11 Oct 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி